• Jan 19 2025

'முக்கிய சீக்ரெட்டுக்கள் என்னட்ட இருக்கு..' பிக் பாஸிலுள்ள பெண் போட்டியாளரை மிரட்டினாரான விஷ்ணு?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 90 நாட்களைக்  கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7. 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயா கூட பரவாயில்லை, ஆனா பூர்ணிமா விஷக்கிருமி என விஷ்ணு கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 அதன்படி, நேற்றைய தினம் இடம்பெற்ற டாஸ்க்கில் ரவீனா வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற, விஷ்ணு மூன்று புள்ளிகளை பெற்றாலும் அவர் தான் முதலிடத்தில் காணப்பட்டார்.

அத்துடன் ,இன்னும் ஒரு சில புள்ளிகளை பெற்று விட்டால் அவர் டிக்கெட் டு பினாலேவில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு.

இவ்வாறான நிலையில், ரவீனாவிடம் பேசிய விஷ்ணு, 'மாயாவை கூட ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளலாம், ஆனால் பூர்ணிமா மிகவும் மோசமானவர், விஷக்கிருமி என்று கூறியுள்ளார். 


இதற்கு, ஏன் என ரவீனா கேட்க, 'பூர்ணிமா ஒன்று குழந்தை இல்லை, அவர் மற்றவர்களை குழந்தை போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார், ஆனால் என்னிடம் மட்டும் அவர் எந்த வம்பும் வைத்து கொள்ள மாட்டார். ஏனெனில் என்னிடம் அவருடைய சீக்ரெட்டுக்கள் உள்ளதால் தன்னிடம் வாலாட்ட மாட்டார் என்று கூறினார்.

மேலும், அவர் நாமினேஷனில் இல்லாமல் மற்றவர்களை பார்த்து 'ரெடி டு கோ' என்று கூறுவது நாகரீகமற்றது. அவரும் நாமினேஷனில் இருந்து கொண்டு சொன்னால் ஓகே' எனவும் விஷ்ணு கூறியுள்ளார்.

இவ்வாறு, விஷ்ணு பூர்ணிமாவை பற்றி கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் சொன்னது போலவே மாயாவை கூட ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்இ ஆனால் பூர்ணிமா மிகவும் மோசமானவர் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement