• Oct 31 2024

மணிமேகலை வீட்டில் களைகட்டும் தீபாவளி.. அடிபொலியான இன்ஸ்டா போட்டோஸ்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  தொகுப்பாளியாக அறிமுகமானவர்தான் மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்ங்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலிருந்து இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கோமாளியாக இருந்தவர், அதன் பின்பு இறுதியாக நடைபெற்ற ஐந்தாவது சீசனில் தொகுப்பாளியாக களமிறங்கினார். இவர் ரக்சனுடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

எனினும் இந்த சீசனில் இவருக்கும் பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி இருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.


இந்த நிலையில் மணிமேகலை தனது கணவருடன் தீபாவளியை  வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். தற்பொழுது இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement