• Jan 19 2025

திருட்டால் மாட்டிய மனோஜ்... வெளுத்து வாங்கும் அண்ணாமலை... பதறும் விஜயா...

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்க நகை எப்படி கவரிங்காக மாறியது என்பதை கண்டுபிடிக்க முத்துவும் என்னென்னவோ செய்கிறார். இப்போது அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாமியார் கொடுத்ததாக சொல்லும் எலுமிச்சை. அதைக்கண்டதும் விஜயா மற்றும் மனோஜ் பயத்திலேயே இருக்கிறார்கள்.


அவர்கள் இன்னொரு சாமியாரிடம் சென்று இந்த எலுமிச்சை சக்தியை குறைக்க இவர்கள் ஒரு பழம் வீட்டில் வைக்கிறார்கள். இந்த நிலையில் நாளை எபிசோடுக்கான புரொமோவில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் விஷயம் நடந்துள்ளது. 

Siragadikka Aasai | 15th to 20th July 2024 - Promo • TamilDhool

அண்ணாமலை திருட்டு புத்தியை விட மாட்டியா, திருந்த மாட்டியா என அடிக்கிறார். இறுதியில் விஜயாவை அடிக்க செல்கிறார், முத்து தடுக்கிறார். இந்த புரொமோ ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் இருந்தாலும் இது கனவாக கூட காட்ட வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். எதுவாகினும் இனி என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement