• Sep 13 2025

மறக்க முடியாத மாவீரன்! – அழகுமுத்துக்கோன் பிறந்த நாளில் உருக்கமாக வாழ்த்து கூறிய விஜய்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய வரலாற்றில் தனிச்சிறப்புடன் நினைவுகூரப்படும் பெருமைக்குரிய சுதந்திரப் போராளிகளில் ஒருவர் மாவீரர் அழகுமுத்துக்கோன்.

இங்கிலாந்து வெள்ளையர்களின் சாய்வுக்கு எதிராக போராடிய சிறந்த வீரரும், தமிழரின் தாயகத் தடங்களை பாதுகாக்க முயற்சி செய்த வரலாற்றுப் போராளியும் ஆவார்.


இந்நிலையில், மாவீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்த நாளாகிய இன்று த.வெ.க தலைவர் திரு. விஜய், சமூக வலைத்தளங்களில் உருக்கமான மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், அழகுமுத்துக்கோனின் வீரத் தியாகம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு, மற்றும் இன்றைய தலைமுறைக்கு அவருடைய பாடங்கள் எவ்வளவு முக்கியமென்பதை தெரிவித்திருந்தார்.


“மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளான இன்றைய தினத்தில், அவருடைய வீரத்தையும் தியாகத்தையும் என்னாலும் போற்றுவோம்." என்ற பதிவையும் வெளியிட்டிருந்தார் விஜய். அவரது இந்த உருக்கமான செய்தி, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Advertisement

Advertisement