• Jul 27 2025

யாராவது ப்ரொபோஸ் பண்ணா சந்தோஷம் தானே? விஜய் ஆண்டனி பேச்சு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜய் ஆண்டனி தனது முழு கவனத்தையும் இசையில் செலுத்த இருப்பதாக அறிவித்து இருந்தார். தற்பொழுது பல படங்களில் இசை அமைப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.


இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சும் யாராவது ப்ரொபோஸ் பண்ணா கூட நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். அது சந்தோஷம் தானே? ஏதோ ஒரு விஷயத்தில் நம்மளால் ஈர்க்கப்பட்டு நம் மீது அன்பு செய்தால் அதை நாம் தப்பாக எடுக்க கூடாது. இதுல போய் என்ன இருக்கு. உங்கள பிடித்திருக்கிறது என்று சொல்லுவாங்க. நானும் எனக்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று சொல்லிடுவேன் " என கூறியுள்ளார்.


இவர் கூறிய இந்த விடயம் தற்போது நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

Advertisement

Advertisement