• Jun 27 2024

விஜய்யின் ‘கோட்’ படத்திற்காக இறந்தவரை உயிர்ப்பித்த வெங்கட் பிரபு.. எமோஷனல் ஆன ரசிகர்கள்..!

Sivalingam / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில் இந்த அறிவிப்பில் தற்போது இறந்தவரை உயிர்ப்பித்த ஆச்சரியமான தகவல் ரசிகர்கள் மத்தியில் எமோஷனல் ஆகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார் என்பதும் இந்த பாடல் நாளை விஜய்யின் ரசிகர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த பாடலை விஜய் தான் பாடுகிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியும் பாடியுள்ளார் என்ற வெங்கட் பிரபுவின் அறிவிப்புதான் ரசிகர்களை எமோஷனல் ஆகியுள்ளது.

ஏஐ டெக்னாலஜி மூலம் பவதாரிணி குரலை ‘கோட்’ படத்தின் ஒரு பாடலுக்காக பயன்படுத்த இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அந்த தகவலை வெங்கட் பிரபு தற்போது உறுதி செய்துள்ளார். ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ’சின்ன சின்ன கண்கள்’ என்ற மெலடி பாடலை விஜய் மற்றும் பவதாரிணி பாடி உள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏஐ டெக்னாலஜி மூலம் இறந்தவர்களின் குரலை பயன்படுத்தலாம் என்பது ஏற்கனவே ஏஆர் ரகுமான் உள்பட சில இசையமைப்பாளர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவும் அதே டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement