• Oct 13 2024

முத்துவின் பைக்கை தட்டித்தூக்கிய ரவுடிகள்..? ரோகிணிக்கு நெருக்கடி கொடுத்த சிட்டி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், முத்துவும்  மீனாவும் பூ கொடுப்பதற்காக ஒன்றாக ஒரு பைக்கில் செல்கின்றார்கள். போகும்போது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக செல்கின்றார்கள்.

அங்கு சென்றபோது தாத்தா கோயிலுக்கு சென்றதாக விபூதியை கொடுக்கின்றார். அதனை மீனாவுக்கு முத்து வைத்து விடுகின்றார். மேலும் தனது கனவில் மீனா வந்ததாகவும் அவர் அழுது கொண்டிருந்ததாகவும் தாத்தா ரொம்ப கவலைப்பட்டு சொல்ல, மீனா அப்செட் ஆகின்றார். 

ஆனால் முத்து உனக்கு ஒன்றும் நடக்காது என தைரியம் கொடுக்கிறார். இருந்தாலும் ரோகிணியும் எனக்கு கெட்ட காலம் என்று சொன்னதை பற்றி சொல்ல, அந்த பார்லரம்மாக்கு வேற வேலை இல்லை நான் இருக்க மட்டும் உனக்கு எதுவும் நடக்காது என்று சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் சத்யா தனது காலேஜ் நண்பருடன் டீ குடித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சிட்டி தனது அடியார்களிடம் அவன் குடிச்ச டீக்கு காசு கொடு என்று அனுப்பி வைக்கின்றார் . ஆனால் சத்யா வேணாம் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் நான் அவனை விட்டு வந்த பிறகு டீக்கு கூட காசு இல்லை என்று சொல்ல தானே இப்படி பண்ணுற, இனி என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லி செல்கின்றார் .


இதனால் கோபப்பட்ட சிட்டி ரோகினிக்கு கால் பண்ணி எப்போது அந்த வீடியோ கிடைக்கும் என கேட்கின்றார். அவர் சீக்கிரமே எடுத்து தருவதாக சொல்லுகின்றார் . அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் டீக்கடைக்கு வந்திருக்க, இவர்களை சும்மா விடக்கூடாது . முத்து தான் எல்லாத்துக்கும் காரணம் அவங்கள அடிச்சு தூக்கனும், மூன்று மாசம் சரி முடியாமல் கிடக்கணும் என்று காரில் விரட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இதை தொடர்ந்து முத்துவும் மீனாவும் போகும் வழியில் சுவாரசியமாக பேசிக் கொண்டு செல்ல, எனக்கு இனி பயமில்லை நீங்கள் இருக்கும் மட்டும் நான் சந்தோஷமாக இருப்பேன். இப்போதே எதுவும் நடந்தால் கூட சந்தோஷமாக சாவேன் என்று மீனா சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த சிட்டியின் கார் லேசாக முத்துவின் பைக்கில் முட்டி விட்டு செல்கின்றது. ஆனால் மீனா யாரோ குடிகாரன் குடித்துவிட்டு இப்படி பண்ணுகிறார் என்று பேசுகின்றார். இறுதியாக வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் அன்றைய நாளுக்கான கணக்கை பார்த்து மீதியை சேமித்து வைக்கின்றார்கள். சீக்கிரம் ரூம் கட்ட வேண்டும் என்று மீனா முத்துவுக்கு அட்வைஸ் பண்ணுகின்றார். 

Advertisement