• Jan 19 2025

சௌந்தர்யா முகத்துல வாந்தி எடுக்காத குறைதான்.. வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஏஞ்சல்ஸ் டெவில்ஸ் டாஸ்க்  நடந்த போது நடைபெற்ற சம்பவங்களை வைத்து போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் ஒரு சில டாஸ்க்குகள் ஒவ்வொரு முறையும் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இம்முறையும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையில் ஏஞ்சல்ஸ் vs டெவில்ஸ் வைக்கப்பட்டது. அதில் அன்சிகா, சௌந்தர்யா ஆகியோர் கத்தி கூச்சலிட்ட சம்பவங்கள் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாகியிருந்தது.

d_i_a

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ  இரண்டில், தர்ஷிகாவுக்கும் ஜாக்குலினுக்கும் இடையில் நடந்த சண்டை பார்ப்பதற்கு நல்லாவே இல்லை என விஜய் சேதுபதி சொல்லுகின்றார்.


மேலும் இது உங்க அப்பன் வீடு இல்லை என்று எந்த அர்த்தத்தில் சொன்னிங்க என தர்ஷிகாவிடம் விஜய் சேதுபதி கேட்கின்றார். அதற்கு பதில் அளித்த தர்ஷிகா, இது பிக் பாஸ் வீடு.. உங்களுடைய அப்பா வீடு இல்லை.. நாங்க விளையாட தான் வந்திருக்கிறோம்.. என்று ஒரு  பேச்சின் அடிப்படையில் சொன்னதாக சொல்லுகின்றார்.


இதை கேட்ட விஜய் சேதுபதி எங்களுக்கு புரிஞ்சாலும் இத நாங்க எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றார். மேலும் ஜாக்குலினிடம் அது எப்படி உங்களுக்கு சீ.. போ.. என்றெல்லாம் சொல்லத் தோணுது என ஜாக்குலினை விளாசியதோடு அவருக்கு சப்போர்ட்டாக வந்த சௌந்தர்யாவையும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று பேச மறுக்கின்றார் விஜய் சேதுபதி. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement