• Jan 12 2025

ரெஸ்ட் இல்லாமல் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த விஷால்.. சபையில் கை கூப்பி சொன்ன விஷயம்?

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் சொதப்பலாக அமைந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு வெளியான ரத்னம் படம் கூட சிறப்பாக அமையவில்லை.

இதை தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மதகஜராஜா படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஷால் மைக்கை கூட பிடிக்க முடியாமல் உடல் நடுங்கிய நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்று கூறப்பட்டது. மருத்துவரும்  அதற்கான சர்டிபிகேட் கொடுத்திருந்தார்.


விஷாலின் உடல்நிலை அறிந்த பல பிரபலங்களும் அவர் மீண்டும் சிறப்பாக வருவார், கம்பீரமாக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். மேலும் மதகத ராஜா படத்தின் பிரீமியர் ஷோ சென்னை சத்யம் திரையரங்கில் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஷால் அதில் பங்கேற்க மாட்டார் என கருதப்பட்ட நிலையில் அவர் பட குழுவினருடன் பங்கேற்றுள்ளார். மேலும் இதன்போது தனக்காக கோவில்களில் பிரார்த்தனை பண்ணிய ரசிகர்களுக்கு தனது இரண்டு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நான் அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி எல்லாம் இல்லை. சுந்தர். சி க்காகத்தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தற்போது எனது உடல் சரியாக விட்டது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement