தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குகின்ற தளபதி விஜய் தற்போது சினிமாவை விட்டு அரசியலுக்குள் இறங்கியுள்ளார். இந்த வருடம் வெளியாக உள்ள தளபதி 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துக்கொள்வதாக கூறியிருந்தார்.
இவர் அரசியலுக்குள் வருவதனை விரும்பாத சிலர் அதற்கு எதிரான பல விடயங்களை மேற்கொண்டு இருந்தனர். எனினும் அவர்களது நடவடிக்கைகளுக்கு சற்றும் அசராமல் தான் கட்சி தொடங்கும் பணியை சிறப்பாக தொடங்கியிருந்தார். பல ரசிகர்கள் இவர் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு அளித்தனர்.
d_i_a
அத்துடன் மாபெரும் மாநாடு ஒன்றை உருவாக்கி தனக்கு ஆதரவு அளிக்காதவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். மேலும் தனது கட்சியில் பலரையும் இணைத்துக் கொண்டார். இந்த செயற்பாடுகள் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று கூறியவர்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.
இந்த நிலையில், தற்போது தமிழ் காக்க களமாடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் வீர வணக்கம் கூறியுள்ளார். இது தொடர்பில் பதிவொன்றையும் பகிர்ந்து உள்ளார்.
குறித்த பதிவில், உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்...
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்...
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்... தமிழ் வாழ்க.. என பதிவிட்டுள்ளார்.
Listen News!