தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் ராம் சரணின் நடிப்பில் இறுதியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக காணப்படும் சங்கர் தயாரித்திருந்தார்.
சுமார் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு 75 கோடி செலவிடப்பட்டது. அவ்வாறு நான்கு பாடல்கள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
d_i_a
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளதோடு, இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக மிரட்டி இருந்தார். முதல் நாளிலேயே இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த திரைப்படம், நாளடைவில் வசூலில் சரிவை சந்தித்தது. இது இந்த படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜுக்கு பெரும் தலை வலியாக மாறியது.
ஏற்கனவே தமிழில் வெளியான இந்தியன் 2 படத்தின் தோல்வியால் ஷங்கர் மீது நெகட்டிவ் கமெண்ட்ஸ் காணப்பட்டது. இதனால் தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜ்க்கு ஷங்கரை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளனர். ஆனாலும் தற்போது இந்த படத்தை எடுத்து நஷ்டப்பட்டுள்ளார் தில்ராஜ்.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த அளவு வசூலில் இலாபம் ஈட்டவில்லை. நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்ற காரணத்தினால் அதனை ஈடுகட்ட தில்ராஜ் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனது சம்பளத்தை குறைக்க ராம் சரண் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, தெலுங்கு சினிமாவில் ராம்சரண் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!