கோலிவுட்டில் பிரபல நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜயின் மகன் தான் ஜேசன் சஞ்சய். தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைந்துள்ளதால் விஜயின் வாரிசை சினிமாவில் உட்பகுத்த பலரும் முயற்சித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின்பு அந்த படத்திற்கான ஹீரோ தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
d_i_a
ஆனால் இறுதியில் ராயன் படத்தில் நடித்த சுந்திப் கிஷானை ஹீரோவாக நியமித்தார் சஞ்சய். இதற்கான படப்பிடிப்புகளும் சென்னையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் சிக்கலில் காணப்படுவதாகவும் இதனால் லைக்கா நிறுவனம் இதிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு ஆரம்பத்திலிருந்து பல சிக்கல்கள் எழுந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி தற்போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் புதிதாக சிக்கல் எழுந்துள்ளன.
ஏற்கனவே லைக்கா நிறுவனம் இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி என படங்களை தயாரித்து தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அதனை ஜேசன் சஞ்சய் படத்தில் செய்யலாம் என திட்டமிட்டது.
ஆனாலும் தற்போது ஷூட்டிங்கில் இடம் பெற்ற பிரச்சனையால் மூன்று நாட்களிலேயே பேக்கப் பண்ணப்பட்டதாகவும் இதிலிருந்து விலக முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை இருந்து லைக்கா நிறுவனம் விலகினாலும் அவருடைய படத்தை தயாரிப்பதற்கு வேறு பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!