பாடகர் யேசுதாஸ் இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அவரது மனமுருகும் குரல் மற்றும் அற்புதமான இசை உணர்வு அவரை ஒரு தனிப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றது.
அவர் தனது இசைப் பயணத்தை சிறு வயதிலேயே தொடங்கி, பின்னர் திரைப்படத் துறையில் கால்பதித்தார். அவருடைய குரல் மக்களை கவர்ந்தது மட்டுமல்லாது இசை விமர்சகர்களும் அவரை பாராட்டினர். அவர் இசைத்துறையில் பத்மபூஷன் விருதும் பெற்றார். இவருடைய "அம்மா என்றழைக்காத உயிரில்லை", "கண்ணே கலைமானே" போன்ற பாடல்கள் தமிழர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்ற பாடலாகும்.
சமீபத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரது மகன் விஜய் ஜேசுதாஸ் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "அப்பா அமெரிக்காவில் நலமாக உள்ளார், உடலில் எந்தவிதக் குறையும் இல்லை. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தமிழ் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இசை உலகில் தனது முத்திரையை பதித்த ஜேசுதாஸ், இன்னும் பல வருடங்கள் அவரது இனிமையான குரலால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
Listen News!