• Jul 27 2024

அபுதாபியில் மோடி திறந்து வைத்த கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்.. ராஜமரியாதை கிடைத்த வீடியோ..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்ற நிலையில் அவருக்கு அங்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்ட  வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வு எடுப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற நிலையில் அங்கு அவர் லூலு குழுமத்தின் தலைவரை சந்தித்து அவருடன் காரில் சென்ற வீடியோ ஏற்கனவே வைரலானது. இதையடுத்து அவருக்கு நேற்று ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கௌரவித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அபுதாபியில் 27 ஏக்கர் நிலத்தில் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவிலுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்துக்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டதாகவும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தலைமை அர்ச்சகர் அவருக்கு ஆசி வழங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’வேட்டையன்’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கூலி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement