• Nov 25 2024

ரஜினியுடன் ஒரே நேரத்தில் இரண்டு படம்.. துள்ளி குதிக்கும் ராகவா லாரன்ஸ்

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்பது திரை உலகில் உள்ள பலருக்கும் ஆசையாக இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் ரஜினி ரசிகராக இருந்து அதன் பின் ரஜினி வெறியராக மாறியவர் நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.
 
இவர் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ரஜினி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதையையும் ராகவா லாரன்ஸ் தான் எழுதியுள்ளதாகவும் எனவே இந்த படத்தில் ரஜினியுடன் ராகவா லாரன்ஸ் இணைந்து பணிபுரிவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.


‘வேட்டையின்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இந்த படத்தில் ரஜினிகாந்த் 20 நிமிடங்கள் சிறப்பு தோற்றத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த 20 நிமிடத்தில் ராகவா லாரன்ஸ் ரஜினியுடன் 10 நிமிடங்கள் தோன்ற உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’தலைவர் 171’ படத்திலும் ராகவா லாரன்ஸ் தான் வில்லன் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் வில்லனாக நடிக்க சிவகார்த்திகேயன் உள்பட ஒரு சில நடிகர்களை லோகேஷ் கனகராஜ் பரிசீலனை செய்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.

நீண்ட நாட்களாக ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த ராகவா லாரன்ஸுக்கு ஒரே நேரத்தில் இரண்டு ரஜினி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தெரிகிறது.

Advertisement

Advertisement