• Jan 10 2025

பழனியை வீட்டைவிட்டு துரத்தியடித்த பாண்டியன்..! புதிய திருப்பத்தில் பணிவிலும் மலர்வனம்

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அடுத்த கதைக்களம் என்ன என்பதற்கான புதிய ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 மற்றும் பணிவிலும் மலர்வனம் ஆகிய சீரியல்களின் ப்ரோமோக்களில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி முதலாவதாக பாண்டியன் ஸ்டோரில், பழனியின் அம்மா பாண்டியனிடம் என் பிள்ளைக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் தயவு செய்து அவனை எங்களுடைய வீட்டுக்கு அனுப்பி வைத்திடுங்கள் என்று  கை எடுத்து கும்பிட்டு கேட்கின்றார். 

d_i_a

இதனால் வீட்டுக்கு சென்ற பாண்டியன் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது உனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்றால் நீ உனது வீட்டுக்கு செல்லு என்று சொல்ல, நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன் என்று பழனி சொல்கின்றார்.


இதனால் கோபப்பட்ட பாண்டியன் இனிமேல் இவன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது.. இவன் பொழுது விடிவத்திற்கு உள்ளே வீட்டை விட்டு வெளியே போய்விட வேணும்.. இவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் இனி சம்மந்தம் இல்லை என்று சொல்லுகின்றார். இதை கேட்டு பழனி அதிர்ச்சி அடைந்து சாப்பிடாமல் எழுந்து விடுகின்றார்.


அதன் பின்பு பாண்டியன் சொன்னபடியே வீட்டை விட்டு கிளம்ப தயாராகின்றார். இதனால் கோமதி அழுது புலம்புகின்றார். இவ்வாறு பாண்டியன் குடும்பத்தை விட்டு பழனி பிரிந்து செல்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

 இதைத்தொடர்ந்து பணிவிலும் மலர் வனம் சீரியலில் அணுவை முக்கிய பிரச்சனையில் இருந்து கதிர் காப்பாற்றுகின்றார். இதனால் அண்ணனை புரிந்து கொண்ட தங்கச்சியாக அணு மனம் மாறி அழுகிறார்.. தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement