• Jan 18 2025

13 கெட்ட வார்த்தைகள்... இருக்குறத விட இன்னும் பெருசா ஆசைப்படுவேன்... லவ்வர் மணிகண்டன் ஓபன் டாக்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

லால் சலாம் படத்தை பார்த்து அஞ்சு நடுங்காமல் தன்னுடைய படத்தின் கன்டென்ட் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இந்த வாரம் போட்டியாக மணிகண்டன் லவ்வர் படத்தை இறக்குகிறார். அந்த படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து பல யூடியூப் சேனல்களிடம் பேட்டிக் கொடுத்து வருகிறார் மணிகண்டன். 


விஜய்சேதுபதிக்கு பிறகு இப்படி வெளிப்படையாக பேசக் கூடிய நபர் யாருமில்லை என ரசிகர்கள் மணிகண்டன் மனதில் இருந்து பேசும் விஷ்யங்களை பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் கம்மி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. கவின் நடித்து வெளியான டாடா படம் காதலர் தினத்தை குறிவைத்து ரிலீஸ் ஆனதை போல லவ்வர் படமும் லவ்வர்ஸ் டேவை டார்கெட் செய்து இந்த வாரம் வெளியாகிறது.


ஏற்கனவே படத்தில் இருந்து 13 கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. ஹீரோயினை ஹீரோ பொசசிவ்னஸ் காரணமாக எப்படி எல்லாம் திட்டுறான் என்பதை காண ரசிகர்கள் அனிமல் படத்துக்கு படையெடுத்து வந்ததை போல படையெடுத்து வந்து பார்ப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.


இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு எய்ம் பண்ணால் நிச்சயம் நடக்கும். அது மிஸ் ஆகுதுன்னா நாம அதுக்கு உண்மையா இல்லைன்னு தான் நான் சொல்வேன். எனக்கு இப்போ ஒரு இடம் கிடைச்சிருக்கு. இன்னும் கூட பெருசா அடுத்து எய்ம் பண்ணூவேன். அதற்காக எந்தளவுக்கு உழைக்க முடியுமோ உழைப்பேன். அது நிச்சயம் நடக்கும் என கான்ஃபிடன்ட்டாக பேசியுள்ளார் நடிகர் மணிகண்டன்.

Advertisement

Advertisement