தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். அவர் எடுத்துக் கொள்ளும் கதையும் அதற்கு அவர் அமைக்கும் திரைக்கதையும் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் லோகேஷின் திரை மொழி ரசிகர்களை ஒரே பதட்டத்துடன் வைத்து இறுதிவரை நகர்த்திச் செல்லும்.
இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலஹாசனின் நடிப்பும் பகத் பாஸிலின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது.
அதன்பின் இளைய தளபதி விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியிருந்தார். இதுவும் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இதுவரை பார்த்திராத விஜயை மாஸாக செதுக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு லோகேஷ் இயக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் எல்சியு இருக்காது என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் அடுத்து எடுக்க படத்தில் அனைத்து கேரக்டரும் இருப்பார்கள். நிச்சயம் அது பீக் எல்.சி.யு மூமென்ட் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி கூலி படத்திற்கு பிறகு தான் எடுக்க உள்ள படத்தில் இருக்கும் படத்தில், இதற்கு முதல் தான் எடுத்த படங்களில் வந்த எல்லா நடிகர்களும் இருப்பார்கள் என கூறி உள்ளார் லோகேஷ். கூலிக்கு பிறகு கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும், இது அவருடைய ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!