• Dec 04 2023

கேரளா பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த லியோ திரைப்படம்- ரெக்கார்ட் மேக்கராக மாறிய நடிகர் விஜய்

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

செவன் கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் இறுதி காட்சியில் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் இடையிலான அந்த உரையாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 லோகேஷின் எல்சியு-வில் தளபதி விஜய் அவர்களும் இணைந்துள்ளதால், அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த வெற்றி விழாவில் கூட விஜய் பேசிய விடங்கள் அனைவரிடமும் வைரலானது.


இந்த நிலையில் கேரள சினிமா பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில், இதுவரை அதிக வசூலை ஈட்டிய முதல் தமிழ் திரைப்படம் என்கின்ற பெருமையை லியோ திரைப்படம் பெற்றுள்ளது.இதன் மூலம் ஒரு புதிய ரெக்கார்டை உருவாக்கி, ரெக்கார்ட் மேக்கராக கேரளாவில் மாறியுள்ளார் தளபதி விஜய் என்பது மறுக்க முடியாத உண்மை. 

மேலும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வானது இன்றைய தினம் சன்டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement