• Aug 23 2025

“தக் லைஃப்” படத்தில் முடிவை மாற்றிய கர்நாடக அரசு.! உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிம்பு மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்திருக்கும் "தக் லைஃப்" திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இதன் வெளியீடு குறித்து ஏற்பட்ட சர்ச்சை தற்போது நீதிமன்றம் வரை சென்று முடிவைத் தேடியுள்ளது.


“தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கதைத்த பேச்சினாலே பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. சில அமைப்புகள் கமல் கர்நாடாகாவினை அவமதிக்கிறார் எனவே படத்தினை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கூடாது என்றனர். 

அதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் சில திரையரங்குகள் படம் ரிலீஸாவதனை தற்காலிகமாக நிறுத்தினர். இதனால் இப்படம் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே வெளியானது. 


கர்நாடகாவில் படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாக முடியாத நிலைமை உருவானதைத் தொடர்ந்து, தயாரிப்பு குழு, உச்சநீதிமன்றத்தை நாடினர். திரைப்பட ரிலீஸுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு தயாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கர்நாடகா மாநில அரசு ஒரு சத்தியப்பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், “தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படும் போது, உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அரச அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பினை வழங்குவார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement