தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் பலரால் கவனிக்கத்தக்க நடிகராகவும் மன்சூர் அலிகான் காணப்படுகிறார். இவர் ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
மன்சூர் அலிகான் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் மேடைகளில் பேசும் பல விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே காணப்படும். சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி பேசிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
d_i_a
இந்த நிலையில், மன்சூர் அலிகான் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் நடிகை குஷ்புவை பற்றி பேசியுள்ளார். தற்போது இந்த விடயம் வைரலாகி வருகின்றது.
அதாவது சமீபத்தில் மத கஜ ராஜா திரைப்படத்தின் போது விஷால், குஷ்பு மற்றும் சுந்தர். சி உட்பட பலர் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்கள்.
இதன்போது விஷால் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த குஷ்பு விஷாலை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கின்றார். இதைப் பற்றி பேசிய மன்சூர், பச்சக் பச்சக்னு முத்தம் கொடுத்தீங்க.. அது அடுத்தவன் பொண்டாட்டி. என்று ஆக்சனுடன் செய்து காட்டியுள்ளார்.
மேலும் பொது இடங்களில் கண்ணகி கண்ணகி என்று பேசிவிட்டு கோவலன் இல்லாமல் வேறு ஒருவருடன் இப்படி முத்தம் கொடுக்கலாமா? இதை சுந்தர். சி வேதனையோடு தான் பார்த்திருப்பார்.
விஷாலுக்கும் கைகள் இப்போதே நடுங்கத் தொடங்கி விட்டன. அவருக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. ஆனாலும் சீக்கிரமே சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது மன்சூர் வழங்கிய இந்த பேட்டி வைரலாகி வருகின்றது.
Listen News!