நடிகர் அஜித் தனது கார் ரேசிங் அணியுடன் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த 24 மணி நேர கார் ரேசில், அஜித் குமார் தனது அணியுடன் சேர்ந்து போட்டியிடுகிறார் இதில் அவருக்கு நான்கு வீரர்கள் உள்ளனர். அணியின் கேப்டனாக அஜித் குமார் திகழ்கிறார்.இதனால் அவரது டீம்க்கு அஜித் குமார் ரேஸிங் என பெயர் வைத்துள்ளார்.
அஜித் இந்தியாவில் தனது நெருங்கிய நண்பர்கள் பலருக்கு இந்த கார் பந்தயத்தை பார்வையிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.அது மட்டுமல்லாமல் இவர் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியமையினால் தல ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
இந்த நிலையில் 24H துபாய் கார் ரேஸிங்கில் பங்கேற்றுள்ள தல அஜித்தைக் காண அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர்.அவ்விடத்தில் தல தல என கத்திய ரசிகர்களுக்கு கை அசைத்து FLYING KISS கொடுத்துள்ளார்.மற்றும் இவரது டீம் நேற்று நடைபெற்ற பந்தய தெரிவில் 7 இடத்தை பிடித்திருந்தமையம் 10 ஆவது இடத்துக்குள் வந்துள்ள ஒரே ஒரு இந்திய அணி இது மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!