• Jan 19 2025

நிறைமாத கர்ப்பிணியான ’ஜெயிலர்’ மருமகள்.. கணவனே கொலை செய்ய முயற்சி.. ‘பெர்த்மார்க்’ டிரைலர்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா நடித்த அடுத்த திரைப்படம் தான் ‘பெர்த்மார்க்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் நாயகனாக ’சார்பாட்ட பரம்பரை’ திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்த நடிகர் சபீர் கல்லரக்கல் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உள்பட பலர் நடித்துள்ள நிலையில் ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் இயக்கி உள்ளார்.



விஷால் சந்திரசேகர் இசையில் உருவான இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ட்ரெய்லரில் மிர்ணா கர்ப்பமாக இருப்பது போன்றும் அவருக்கு இயற்கை பிரசவம் நடைபெற வேண்டும் என்பதற்காக அவரை அவரது கணவர் சபீர் கல்லரக்கல் ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகவும் அந்த காட்டில் நடைபெறும் திகில் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

ட்ரைலரை பார்க்கும்போது கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் சபீர் கல்லரக்கல் கொலை செய்ய முயற்சி செய்வதும் கணவனின் கொலை முயற்சியில் இருந்து மிர்ணா எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

இந்த  படம் ஒரு திரில் படமாக இருந்தாலும் இந்த படத்தின் மூலம் இயற்கை பிரசவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது எனவும், இன்றும் சில கிராமங்களில் இயற்கையான பிரசவங்கள், அறுவை சிகிச்சை இல்லாமல் நடந்து வரும் நிலையில் அதன் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனை கதை தான் இந்த படம் என்றும் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

’90 களின் காலகட்டத்தில் கதை நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் ராணுவ வீரர் கேரக்டரில் சபீர் கல்லரக்கல், அவரது மனைவியாக மிர்ணா நடித்துள்ளனர் என்றும் இந்த படம் வழக்கமான படம் போல் இல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement