சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மனோஜின் நண்பருடன் காசை ஏமாற்றியவர்கள் பற்றி அங்குள்ள இளநீர் கடையொன்றில் விசாரிக்கின்றார். குறித்த கடைக்காரர் அந்த வீட்டுக்கு டிவி சீரியலில் நடிக்கும் நபர் ஒருவர் வந்து போவதாக சொல்கின்றார். இதனால் வேறு எதுவும் தகவல் கிடைத்தால் தனக்கு அறிவிக்குமாறு முத்து தனது போன் நம்பரை கொடுத்து விட்டு செல்கிறார்.
இதை தொடர்ந்து மீனா கோவிலில் நிற்க, அங்கு முத்து செல்கின்றார். மேலும் ஜீவா கொடுத்த கண்ணாடியை போட்டுக்கொண்டு கலர்ஸ் காட்டியதோடு மீனாவுக்கும் போட்டு அழகு பார்க்கின்றார். இதன்போது மீனா, சீதா, மீனாவின் அம்மா ஆகியோர் செல்பி எடுக்கின்றார்கள். எடுத்த புகைப்படங்களை தனது போனுக்கு அனுப்ப சீதா போனை பார்க்கும்போது அதில் ஜீவா இருக்கின்றார்.
இதன்போது இதுதான் மனோஜின் கல்யாணத்தில் நின்ற பொண்ணு. பெயர் கூட ஜீவா என்று சொல்லுகின்றார். மீனாவும் அப்படி என்றால் இவங்க தான் உங்க அண்ணனை ஏமாத்தின காதலியா என்று சொல்லி சந்தேகத்தை கிளப்பி விடுகின்றார்.
இதை அடுத்து முத்து நேராக ஜீவாவை பார்க்க செல்கின்றார். அங்கு தான் கார் ட்ரைவராக வரவில்லை. எனக்கு இன்னொரு முகம் இருக்குது என்று சொல்லி, தான் மனோஜின் அண்ணா.. அவரிடம் இருந்து ஏமாற்றி போன 30 லட்சம் வேண்டும் என ஜீவாவிடம் கேட்கின்றார்.
இதை கேட்ட ஜீவா தான் போன முறை வந்தபோதே மொத்த காசலையும் வட்டியுடன் செட்டில் பண்ணிட்டேன் என்று சொல்லுகின்றார். முத்து நம்ப மறுக்கவும், நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி உங்க அண்ணனை விட உங்க அண்ணன் பொண்டாட்டி தான் ரொம்ப டேஞ்சர் என்று சொல்லுகின்றார். இதனால் இந்த உண்மைகளே எல்லாம் வீட்டில் வந்து சொல்லுமாறு முத்து அழைக்கின்றார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஹோலில் இருக்குமாறு சொன்னதோடு அங்கு இருக்கும் மேசை ஒன்று எடுத்து வழக்கு விசாரணை நடக்கப் போகிறது என்று அதிரடி காட்டுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!