• Jun 12 2026

இப்படியொரு வாழ்க்கை யாருக்கு கிடைக்கும்.? உலகமே பார்த்து ஏங்கும் நயனின் குடும்ப கிளிக்ஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றதாக நயன்தாரா அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கிடையில், இருவரும் ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டிருந்ததாகவும் பின்னர் வெளிப்படுத்தினர்.

தற்போது தங்களது இரு மகன்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு, அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

படப்பிடிப்பு பணிகளுக்காக செல்லும் இடங்களிலும் நயன்தாரா தனது குடும்பத்தினரையும் அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவாக இருப்பதாக முன்பு சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தற்போது அவர் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருப்பதால் அந்த வசதிகள் வழங்கப்படுகின்றன.


இதற்கிடையில், விக்னேஷ் சிவன் இயக்கிய சமீபத்திய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகிறது. அதில் ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் தொடர்ந்து 100 கோடி வசூல் பெற்ற நிலையில், இந்த படம் மட்டும் பெரிய வெற்றி பெறவில்லை என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “Sun & Sons kissed” என பதிவிட்ட அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement