• Jun 12 2026

நான் ரீல் முதல்வன்… ஆனால் விஜய் ரியல் ஆட்சி நடத்துவாரா.? அர்ஜுன் ஓபன் ஸ்டேட்மென்ட்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த பட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அர்ஜுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நடிகரும் தற்போதைய அரசியல் தலைவருமான விஜய் குறித்து தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

அதில் அவர் கூறுகையில், முதல்வன் படத்துடன் இன்றைய அரசியல் சூழலை ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரீல் முதல்வன் தான். ஆனால் விஜய் உண்மையில் மக்களுக்காக உழைக்கும் தலைவராக மாறுவார் என்று நம்புகிறேன்.


மேலும், நாட்டுக்கு அவர் 100 சதவீதம் நல்லது செய்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன. அவருக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்த அர்ஜுன், அவரை சந்தித்தபோது மிகுந்த பெருமையாக இருந்தது. திரைத்துறையிலிருந்து இன்னொரு தலைவர் உருவாகிறார். கடவுள் அவருக்கு பெரிய வலிமையை கொடுக்க வேண்டும். அவருக்கு முன்னால் நிறைய பொறுப்புகள் உள்ளன எனவும் உருக்கமாக கூறினார்.

அர்ஜுனின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement