• May 22 2025

நீ என்ன ரவுடியா.? செழியனைக் கைது செய்த பொலீஸார்..! நடுரோட்டில் கதறும் ஜெனி..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி கோபியைப் பாத்து இப்பவெல்லாம் பாக்கியா எங்கட பேச்சை மதிக்கிறதே இல்ல என்கிறார். அதனை அடுத்து எழில் ஊருக்குப் போறதுக்காக எல்லாத்தையும் ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்த நேரம் பாத்து பாக்கியா அங்க வந்து நிற்கிறார். அதைப் பார்த்த அமிர்தா அம்மா sorry நான் உங்கட பிஸ்னஸுக்கு ஹெல்ப் பண்ணுறேன் என்று சொன்னான் ஆனா எதுவுமே செய்யாமல் இப்ப கிளம்புற situation வந்திட்டு என்று அழுகுறார்.

அதுக்கு பாக்கியா நீ என்னோட பிஸ்னஸைப் பார்க்கவா உனக்கு எழிலைக் கல்யாணம் பண்ணி வைச்சது என்று கேக்கிறார். மேலும் என்னைப் பற்றி எல்லாம் ஜோசிக்கவேணாம் நீ ஜோலியா இருந்திட்டு வா என்கிறார். அதனை அடுத்து ஈஸ்வரி எழிலுக்கு வேலை இல்லாத நேரமாகப் பாத்து வெளியில போ என்கிறார். 


இதனைத் தொடர்ந்து பாக்கியா வீட்டிற்கு பொலீஸ் வந்து நிற்கிறார்கள். அதைப் பார்த்து வீட்ட இருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் அந்தப் பொலீஸ் ஹோட்டல் நடத்திற பாக்கியலட்சுமி யாரு என்று கேக்கிறார். மேலும் உங்களுக்கும் கவுன்சிலருக்கும் என்ன பிரச்சனை என்று பாக்கியாட கேக்கிறார். 

அதுக்கு பாக்கியா எனக்கு அவர் கூட எந்தப் பிரச்சனையும் இல்ல என்கிறார். இதைக் கேட்ட பொலீஸ் பிஸ்னஸ் செய்யுறெண்டால் அதமட்டும் தான் பண்ணனும் தேவையில்லாத பிரச்சன எல்லாம் பண்ணக் கூடாது என்கிறார். மேலும் செழியனைப் பாத்து நீ என்ன பெரிய ரவுடியா என்று கேக்கிறார். இதனை அடுத்து பொலீஸ் செழியனை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறார்கள்.


அதைப் பார்த்த ஜெனி என்ன றீசனுக்கு அவனை பிடிச்சுக் கொண்டு போறீங்க என்று கேக்கிறார். பின் ஜெனி பாக்கியாவைப் பாத்து உங்களால தான் இப்படி எல்லாம் நடந்திருச்சு என்கிறார். அதனை அடுத்து ஈஸ்வரி செழியனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று பாக்கியாவைப் பாத்துச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement