• May 22 2025

நான் aunty-ஆ..! இப்பவும் குழந்தை மாதிரித் தான் feel பண்ணுறேன்..! சிம்ரனின் உணர்வுகள்...

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பு மற்றும் நேர்த்தியான அழகு என்றால் முதலில் நினைவிற்கு வருபவர் சிம்ரன் தான். 90களில் விஜய், அஜித், பிரசாந்த், கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பல ஹிட் படங்களை கொடுத்த இவர், இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிம்ரன், தனது திரை வாழ்க்கையின் 30 வருடங்கள் பற்றிய உணர்ச்சிகள் குறித்து மிக அழகாகப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


அந்நிகழ்வில் நடுவராக இருந்த ஆவுடையப்பன், சிம்ரனிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.  அதில் ஒரு கேள்வியாக, "30 வருடங்களாக திரைத்துறையில் உங்களை காண்கிறோம். இப்ப அந்த பயணத்தை திரும்பிப் பார்த்தால்… உங்களுக்கு tired ஆக பீல் ஆகுதா, இல்ல proud ஆக பீல் ஆகுதா?" என்று கேட்டிருந்தார்.


இதற்குப் பதிலளித்த சிம்ரன், "நான் எப்பவுமே சின்னக் குழந்தை மாதிரித் தான் பீல் பண்ணுவேன். அப்படி பீல் பண்ணாம நம்ம வேலைய love பண்ண முடியாது. அதே பாசத்தோட நம்ம பணி தொடரும்." என்றார். 

இதை கேட்ட ஆவுடையப்பன், “இந்த வயசிலயும் குழந்தை மாதிரி பீல் பண்ணுறது தான் உண்மையான வெற்றி. அந்த மனநிலை இல்லாதவர்களுக்குத் தான் வேலை சுமை மாதிரி ஆகுது..!” என்று குறிப்பிட்டார். இருவரிடையேயான இந்த பாசமிகு உரையாடல், ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.


சமீபத்தில் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதிலிருந்து மக்களின் பாராட்டைப் பெற்ற படமாக திகழ்கின்றது. குடும்ப ஒற்றுமை, நகைச்சுவை, உணர்ச்சி எனப் பல பரிமாணங்களை உள்ளடக்கிய அந்தப் படத்தில் சிம்ரன் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களைக்  கவர்ந்துள்ளார்.

பேட்டியில் இது பற்றி நடுவர் கேட்டபோது சிம்ரன் கூறியதாவது, "இந்த மாதிரி படம் ஹிட் ஆகும்னு எங்களுக்கே தெரியாது. நாங்க எப்போதும் நம்ம வேலைய sincere-ஆ பண்ணுவோம். அப்ப தான் அது genuine ஆக வெளியே வரும். இதுவும் அப்படித்தான்." என்றார். 

“சிம்ரன் ஆன்டி ரோல் பண்ணறாங்க…” என்ற நக்கல் பதிவை பார்த்ததையடுத்து, நடுவர் சிம்ரனை இது குறித்தும் கேட்டிருந்தார். அதற்கு சிம்ரன், “அந்த மாதிரி answer வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்ல. அது ரொம்பவே hurt ஆகிடுச்சு. ஆனா, இதே மாதிரி நினைக்காத, நம்ம genuine ஐ appreciate பண்ற மக்கள் இருக்காங்க. அவர்களுக்காகத்தான் நம்ம இருக்கணும்.” என்றார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement