விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது.
தொடக்கத்திலேயே 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்ததால், நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆரம்ப நாட்களிலேயே சில திருப்பங்கள் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு இருந்த விருப்பத்திற்கு எதிரானதாக இருந்தது.
வீட்டில் முதலில் நுழைந்த 20 போட்டியாளர்களில் ஒருவர், நந்தினி. இவர் வீட்டின் ஒழுங்கு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னால் தொடர முடியாது எனக் கூறி வீட்டிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, முதலாவது வார எலிமினேஷனில் இயக்குநர் பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை ரசிகர்கள் எதிர்பாராத வகையில் போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், நிகழ்ச்சி இப்போது ஒரு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் “வீட்டு தலைவர்” (House Captain) ஆக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த வாரத்தில், துஷார் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரது செயல்பாடுகள் குறைந்தளவில் காணப்பட்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 9-ஐ ஹோஸ்ட் செய்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்பொழுது துஷாரை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது வார்த்தைகள் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகியிருக்கின்றன.
“வீட்டு தல இப்படியா பண்ணுறது? வீட்டு தலையா தேர்ந்தெடுக்கப்பட்டு எதுவுமே செய்யாமல் இருக்கீங்களே துஷார். நீங்க ஒழுங்கா இருந்தால் தானே மத்தவங்களுக்கு சொல்ல முடியும். என்ன நினைப்பில சுத்தினீங்க...” என்று கேட்டுள்ளார் விஜய் சேதுபதி. இந்தக் கருத்துகள் ரசிகர்களிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!