நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமாக காணப்படுகின்றார்.
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் இது தொடர்பில் ராஷ்மிகாவோ, விஜய் தேவரகொண்டாவோ மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தன்னுடைய நிச்சயதார்த்தம் தொடர்பான வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
ராஷ்மிகா நடிப்பில் வெளியான தம்மா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு குழப்பத்துடனும் வெட்கத்துடனும் ராஷ்மிகா பதிலளித்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி வருகின்றது.
அதன்படி அவர் பதிலளிக்கும் போது ராஷ்மிகா சிரித்தபடி, இல்லை... இல்லை.. உண்மையில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.. ஆனால் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிற்குமான உங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ராஷ்மிகாவின் கையில் மினுமினுக்கும் மோதிரம் ஒன்று காணப்பட்டது. இது நிச்சயதார்த்த தகவல்களை மேலும் தூண்டியது. அதன் பின்பும் ராஷ்மிகாவும் விஜய் தேவர்கொண்டாவும் டேட்டிங் போன புகைப்படங்களும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!