சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , பார்வதி தனது நண்பருக்கு டி ஊற்றிக் கொடுத்து கலகலப்பாக பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் மீனா வருகின்றார். அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு சாமியரையில் பூ வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இதன் போது பார்வதிக்கு கதை எழுதி வந்ததாக அவருடைய நண்பர் கொடுக்க, அதை பார்வதி வாசிக்கின்றார். அதன்பின்பு அங்கு வந்த மீனா கதையை கேட்பதற்கு நன்றாக இருந்தது. நீங்கள் youtube சேனல் ஆரம்பிங்க என்று ஐடியா கொடுக்கின்றார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயா இவ ஐடியா கொடுத்தா நல்லா தான் இருக்கும் என்று மீனாவை திட்டுகின்றார். அதன் பின்பு விஜயா பார்வதியை கண்டிக்க, உனக்கு மொத்த குடும்பமும் இருக்குது.. ஆரம்பத்தில் டான்ஸ் கிளாஸ் பண்ணினா, இப்போ ஜோகா கிளாஸ் பண்ணுறா.. உனக்கென்று ஏதாவது செய்றா..
ஆனால் நான் ஏன் யூடியூப் சேனல் செய்யக்கூடாது . இப்போதுதான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் கிடைத்து இருக்கின்றது. அதையும் கெடுக்க பார்க்காத என்று விஜயாவை திட்டி விட்டு செல்கின்றார் பார்வதி.
இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா சீதாவையும் மீனாவையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க மயங்கி விழுகின்றார். அதன் பின்பு மீனாவும் சீதாவும் ஹாஸ்பிடலுக்கு வந்து, அவரைப் பார்த்ததோடு சீதா தன்னுடைய வீட்டுக்கு கிளம்பி வருமாறு சொல்லுகின்றார். ஆனால் மீனா நான் உங்க கூடவே இருந்து பார்க்கின்றேன் என்று சொல்ல, இருவரும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடன் வருமாறு பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதை பார்த்த முத்து, சீதா வீட்டிற்கு அம்மா செல்லட்டும். அதுதான் நல்லது என்று சொல்ல, மீனா அதிர்ச்சியாக பார்க்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!