• Oct 23 2025

தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த சமந்தா.! யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் புத்தாடை  உடுத்தி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கமான ஒன்றாக  நடைமுறையில் உள்ளது. 

இந்த பண்டிகையை சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தென்னிந்திய சினிமா பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில், நடிகை சமந்தா  தீபாவளி பண்டிகையை குழந்தைகள் மற்றும்  ராஜ் நிதி மோருடன் கொண்டாடிய  புகைப்படங்கள் தற்போது  வைரலாகி உள்ளன. 


அதன்படி  தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரசு சாரா நிறுவனத்துடன்  இணைந்து அங்குள்ள குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் சமந்தா  தீபாவளியை கொண்டாடியுள்ளார்.  தற்போது இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

அதே வேளை தனது புதிய வீட்டில்  ராஜ் நிதிமோருடனும் பண்டிகையை கொண்டாடிய  புகைப்படங்களையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.  ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில்  சமந்தா  அதை உறுதி செய்யும் வகையில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. 



 

Advertisement

Advertisement