பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தினமும் ஒவ்வொரு கன்ட்டென்ட்டை கொடுத்து வருகின்றார்கள். அதிலும் சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களிலேயே தனக்கு இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று நந்தினி வெளியேறினார். அதன்பின்பு இயக்குநர் பிரவீன் காந்தி முதலாவது வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். இரண்டாவது வாரம் அப்சரா வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 17வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதில் ஜூஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அதற்கு பார்வதியும் திவாகரனும் ஜட்ஜ்மெண்ட் பண்ணுகிறார்கள். இதன்போது ஆதிரையின் ஜூஸ் பாட்டில் வெடித்திருப்பதாக பார்வதி கூறுகின்றார்.
ஆனாலும் இதைவிட ஆரஞ்சு பாட்டில் பெர்ஃபெக்டா இருந்துச்சுன்னா இத ரிஜெக்ட் பண்ணுங்க என்று ஆதிரை சொல்ல, எதை செலக்ட் பண்ணனும் எதை ரிஜெக்ட் பண்ணனும் என்று எங்களுக்கு தெரியும் என பார்வதி சொல்லுகின்றார்.
இதன் போது ஆரஞ்சு பாட்டில் உள்ள ஜூஸை பார்வதி கீழே கொட்ட, எனக்கு இது புரியவே இல்லை என்று எல்லா பாட்டிலையும் அடித்து உடைக்கின்றார் ஆதிரை.. அந்த நேரத்தில் கலையரசனும் அங்கிருந்த பாட்டில்களை தட்டி மேசையை உடைத்து ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றார்.
இறுதியில் அங்கு வந்த கனி, சட்டம் தப்பா போகும்போது வன்முறை வெடிக்கும் என்று கத்துகின்றார்.. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..
Listen News!