• Oct 23 2025

இளம் காதலுக்கு இப்படியொரு வரவேற்பா.? "Dude" வசூலில் மாபெரும் சாதனை..

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே இளம் காதல் கதைகளைச் சொல்லும் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில், 2025 அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியான ‘டியூட்’  திரைப்படம், ரிலீஸாகி ஐந்தாவது நாளிலேயே ரூ.95 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தினை தயாரித்த நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


பிரதீப் ரங்கநாதன் தனது இயல்பான நடிப்பு, இளைஞர்கள் மத்தியில் கொண்டிருக்கும் பிரபலத்தையும் பயன்படுத்தி, 'டியூட்' என்ற படம் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிக்கதையில் நடித்துள்ளார். இப்போது இவர் தென் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது நடிப்பு மற்றும் அழகான முகபாவனைகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதேநேரம், 100 கோடி கிளப்பிற்குள் விரைவில் ‘டியூட்’ படமும் சேரும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

Advertisement

Advertisement