தமிழ் திரைத்துறையில் தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். கடந்த வருடம் ரிஷிகேஷில் அமைந்துள்ள ஷிவ்புரி பகுதியில், கங்கை நதி கரையில் யோகா பயிற்சியாளர் லவ்ல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பண்டிகைகள் நிறைந்த இந்த அக்டோபர் மாதத்தில், அவர்கள் இருவரும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
இந்த இனிமையான குடும்பக் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் பாரம்பரிய பட்டு சாறியில் மிகவும் அழகாக காணப்படுகின்றார். திருமணத்துக்குப் பிறகு, அவர் திரைத்துறையை விட்டு சற்று விலகினாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!