• Oct 23 2025

பிக் பாஸில் கட்டிப்புடி வைத்தியம் பார்க்கும் வாட்டர் மெலன்.! சபரி சொன்ன விஷயம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது.  இந்த சீசனின் ஆரம்பத்தில்  யோகா பயிற்சியாளரான நந்தினி வெளியேறினார். முதல் வார எவிக்ஷனில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது எவிக்ஷனில் திருநங்கை அப்சராவும் வெளியேறி இருந்தனர். 

தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.  மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள், பிக் பாஸ் டீலக்ஸ் என்ற பெயரில் வசதிகள் நிறைந்த மற்றொரு வீடு பிரிக்கப்பட்டு   போட்டியாளர்களுக்கு மத்தியில்  போட்டியும் நிலவி வருகிறது. 

இதில்  வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்  பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றார்.  இவர் செய்யும் அலப்பறைகள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தை  கவர்ந்துள்ளன.  ஆனாலும் சிலருக்கு சலிப்பை கொடுக்கின்றன. 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில்  திவாகர் பெண்களை  கட்டிப்பிடிப்பதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை திவாகருக்கு சபரி  விளக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி சபரி திவாகரிடம் பேசும் போது,  எல்லாருமே தனித்தனியாக சொல்றாங்க..   இதனால உன் லைஃப் காலி.. கேரியர் காலி..  நீ இத்தனை நாள் சம்பாதித்து வைத்த பெயரும் காலி.. 

அதற்கு திவாகர் விளையாட்டுக்கு செய்ததாக சொல்ல,  இது விளையாட்டுக்கு கிடையவே கிடையாது .. இப்படி பண்ணாத என்று யாராவது ஒருவர்  உனக்கு எதிராக கையை காட்டினால் நீ காலி..

நாங்க உன் மேல இருக்கிற பொறாமையில் சொல்லல. ஒரு அண்ணன்னா பாத்தோம்.  அதனாலதான் சொல்கிறோம் .. என்று அட்வைஸ் பண்ணி உள்ளார்கள்.  

Advertisement

Advertisement