பிக் பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய தலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டை அலங்கரித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தன.
அந்த நாளில் வீட்டு தலைவராக கனி பொறுப்பேற்றார். மேலும் இந்த முறை வீட்டுத்தல அறைக்குள் யாரும் சுதந்திரமாக சென்று வரலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்ற புதிய டீம் பிரிக்கப்பட்டது. கனி புதிய மாற்றங்களை ஏற்படுத்தி விக்ரமை தனது பர்சனல் அட்வைஸராக நியமித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி பிக் பாஸ் வீட்டு உறவுகளுக்கு விஜய் சேதுபதி சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அனைவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு சுவையான உணவை உண்டு மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து பைசன் திரைப்பட குழுவினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். அதில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோர் சென்று, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் கலந்துரையாடி இருந்தனர்.
இதன்போது பைசன் படத்திற்காக திருநெல்வேலியில் சுமார் இரண்டு அரை ஆண்டுகள் தங்கி ஆடு, மாடு மேய்த்தல், கபடி போன்றவற்றை கற்றுக் கொண்டதாக துருவ் தெரிவித்தார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் அர்ச்சனா கலந்து கொண்டதால் அதனை ஒவ்வொரு நாளும் பார்த்ததாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.
Listen News!