• Oct 23 2025

சக்திவேல் கிட்ட சத்தியம் வாங்கும் பாட்டி.. ரொமான்ஸ் பண்ணி ஜாலியாக இருக்கும் கதிர்-ராஜி.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாட்டியோட பிறந்தநாளுக்கு சமைக்க வாறன் என்று சொன்னவர் குமாருக்கு போன் எடுத்து தன்னால வரமுடியாது என்கிறார். மேலும், எங்கட சமையல் மாஸ்டரோட அம்மா இறந்திட்டாங்க அதுதான் வரமுடியாது என்கிறார். அதைக் கேட்ட குமார் வேற மாஸ்டரை வைத்து சமைக்க முடியாதா என்று கேட்கிறார். அதுக்கு அவர் அது ரொம்ப கஷ்டம் நான் வேற ஆட்களிட்ட கேட்கிறேன் என்கிறார். 


மறுபக்கம் தாத்தாவோட போட்டோவை ராஜி சொல்ல ஆர்டிஸ்ட் வரையுறார். கடைசியில அந்த ஆர்டிஸ்ட் வரைந்த படம் தாத்தா மாதிரியே இருக்கிறதைப் பார்த்த ராஜி சந்தோசப்படுறார். மறுநாள் காலையில பாட்டி பாண்டியன் குடும்பம் பிறந்தநாளுக்கு வருவாங்களா என்று ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். மேலும் சக்திவேல் கிட்ட கோயிலில வைச்சு எந்தப் பிரச்சனையும் பண்ணாமல் இருந்தாலே போதும் என்கிறார் பாட்டி.

அதனை அடுத்து பாட்டி சக்திவேல் கிட்ட எந்தப் பிரச்சனையும் பண்ணக் கூடாது என்று சத்தியம் வாங்கிறார். பின் கோமதி பழனியைப் பார்த்து என்ர வேண்டுதல் எல்லாம் ஒரே ஒன்னு தான் அம்மா மனசு குளிர்ந்தால் காணும் என்கிறார். மேலும் பாண்டியன் கிட்ட நீங்க வாங்கிக் கொடுத்த புடவை ஒன்னு இருக்கு அதை அம்மாவுக்கு கொடுக்கவா என்று கேட்கிறார் கோமதி.


அதுக்கு பாண்டியனும் சம்மதிக்கிறார். அதனை அடுத்து கதிர் ராஜிக்கு மல்லிகை பூவை வைச்சு விடுறேன் என்று சொன்னதைக் கேட்ட உடனே ராஜி சந்தோசப்படுறார். பின் எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு கிளம்புறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement