• Apr 16 2026

நம்ம ஓவியாவுக்கு என்னாச்சு.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஓவியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பட்டித்தொட்டியெங்கும்  பிரபலமாக மாறினார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஓவியா, ரசிகர்கள் கேள்விகளுக்கு தைரியமாக பதிலளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கரூர் விவகாரம் தொடர்பில் விஜயை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.


இந்த நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சர்ச்சையாக காணப்படுகின்றன. கருப்பு நிற ஆடையில் அவர் வெளியிட்ட போட்டோஸ் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement