தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமண விழா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்துள்ளன.

உதய்ப்பூர் நகரில் நடந்த திருமணம், ஒரு சொகுசான ஹோட்டல் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாச்சார வழிமுறைகள், பாரம்பரியமான அலங்காரம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதில், விழா உணர்ச்சிகரமாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.
திருமண புகைப்படங்களில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தம்பதிகள் அழகாக தோன்றி இருந்தனர்.
திருமணத்தைத் தொடர்ந்து, தற்பொழுது புதுமண தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த தரிசனத்தின் போது, பக்தர்கள் அவர்களை பார்த்து வாழ்த்தி, புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

தரிசனம் முடிந்த பிறகு, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா பக்தர்களுக்கு இனிப்பு வழங்கிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் “கியூட் ஜோடி” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!