தமிழ் சினிமாவில் வெற்றி நடைபோட்டு வருகின்ற திரைப்படம் "டூரிஸ்ட் பாமிலி " இந்த திரைப்படம் மே 1 ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை பெற்று வருகின்றது . இந்த நிலையில் படத்தில் சிறப்பு பாடலாக "மம்பட்டியான்" திரைப்படத்தில் இருந்து மம்பட்டியான் என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ளார்.மேலும் இந்த இப் படத்தில் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ்,யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்துள்ளார் . இந்த படத்திற்க்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார் .
மேலும் இப்படத்தில இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன இதில் மிக முக்கியமாக "மம்பட்டியான் " திரைப்படத்தின் பாடல் பயன்படுத்தி இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து "மம்பட்டியான்" படத்தின் இயக்குநர் தியாகராஜன் டூரிஸ்ட் பாமிலி படம் குறித்து பேசும் போது சில விடயங்கள் கூறியுள்ளார்.
இந்த படத்தில் பயன்படுத்திய மம்பட்டியான் பாடல் "என்னிடம் அனுமதி வாங்கவில்லை என்றும் என்னிடம் பலர் வழக்கு பதிவு செய்து பணம் வாங்க சொன்னார்கள் ,ஆனால் எனக்கு தோன்றவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த பாடல் மறுபடியும் ஹிட் ஆனதற்கு நான் தான் பணம் கொடுக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார் . இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!