• Apr 15 2026

கரடிக்கு முடிவிட்டது போல இருக்காரு புகழ்.. மாகாபா பயந்துட்டான்.! பொளந்து கட்டிய திவாகர்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி செட்டில் தன்னை மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் ஆகியோர் மது போதையில் அடித்ததாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் போலீசிலும் புகார் கொடுத்ததாக தெரிவித்தார். 

இதை தொடர்ந்து மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் ஆகிய மூவரும்  இன்றைய தினம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானதோடு, இது தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்து தங்களுடைய விளக்கத்தையும் கொடுத்தனர். 

அதில், குக் வித் கோமாளி செட்டில் இருக்கும் போது அங்கு கலந்து கொண்ட போட்டியாளரின் மனைவி ஒருவரிடம் திவாகர் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனாலேயே தட்டி கேட்டதாகவும் மாகாபா ஆனந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் திவாகர் .


அதில் அவர் கூறுகையில், மாகாபா ஆனந்த் உண்மையிலே பயந்து போயிட்டார், அவர் வலுவிழந்து போயிட்டார். நான் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து அன்றைக்கு வராமல் இன்றைக்கு வந்து இருக்கின்றார். சேனலை சொல்லி தப்பு இல்லை.

சேனல் என்னை அதிகமாக ப்ரோமோஷன் பண்ணுவதற்காகவே யூஸ் பண்ணுகிறார்கள். அவர்கள் TRP-ஐ எகிற வைப்பதற்காகவே என்னை அழைக்கின்றார்கள். 4–5 எபிசோடு வரை என்னை பயன்படுத்திவிட்டு விடுகின்றார்கள். எல்லா நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் நடக்கிறது.


மாகாபா ஆனந்த் என்னுடன் நேரடியாக பேசி இருக்க வேண்டும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன், நான் படித்த கல்வி மீது சத்தியமாக சொல்லுகின்றேன். இதே போல அவரும் தன்னுடைய தாய் மீதும் மகள் மீதும் சத்தியம் பண்ணி உண்மையை சொல்லுவாரா?

அதிலும் புகழ் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய தலைமுடியை பார்த்தால் கரடி குட்டிக்கு முடி விட்டது போல இருக்கிறது. அவர் எனக்கு தப்பாக பேசுகின்றார். அவரும் அவருடைய முகமும்.. எனக்கு தெரியவில்லை என்று திவாகர் திட்டி தீர்த்துள்ளார்.

அத்துடன் அவர் சில படங்களிலேயே நடக்கின்றார். அவருக்கு சின்ன சின்ன வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன. மலேசியாவில் அவர் குடித்துவிட்டு செய்த சேட்டையில் அவரை அடித்து உதைத்து உட்கார வைத்தது எல்லாம் எனக்கு தெரியும். இவர்கள் இருவரும் சேனலுக்கு பின்னாடி ஒழிந்து நின்று பேசுகிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார் திவாகர்.

Advertisement

Advertisement