• Apr 15 2026

மனைவி தோல் மேல கைய போட்டு ஒரு நாள் வாறீயானு கூப்பிட்டான்! கொதித்தெழுந்த மாகாபா

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி செட்டில், மாகாபா ஆனந்த் , புகழ் மற்றும் கானா வினோத் உள்ளிட்டோர் தன்னை குடித்துவிட்டு தாக்கியதாக “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களையும் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்டர் மெலன் ஸ்டார் ஏற்கனவே பல பிரபலங்களைப் பற்றி தவறாக பேசி வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். இதனால் திவாகர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் பின்னர் அவர் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றார். அங்கும் அவர் தற்பெருமையாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இவ்வாறான நிலையில், மா.கா.பா. ஆனந்த், கானா வினோத் மற்றும் புகழ் ஆகியோர் தன்னை குடித்துவிட்டு தாக்கியதாகவும், இரும்புக் கம்பியால் அடித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மா.கா.பா. ஆனந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில்,


“நான் 18 மணி நேரம் நின்று நிகழ்ச்சி நடத்துபவன். ஒருவர் குடித்துவிட்டு இருந்தால், எப்படி அவ்வளவு நேரம் நிகழ்ச்சி நடத்த முடியும்? அவர் கூறுவது எல்லாம் உண்மை அல்ல. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் திவாகர், ஒரு போட்டியாளரின் கணவர் முன்னிலையில், அவரது மனைவியிடம் தகாத முறையில் பேசி, தோளில் கை வைத்து அழைத்துள்ளார். இது காமெடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

அப்போது, திவாகர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறினார். இதனால் அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கினர். அதன் பின்னர் அவருக்கு இரண்டு மாதங்களாக எந்த நிகழ்ச்சியும் கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் வாய்ப்பு கொடுத்தது தவறாகி விட்டது,” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement