தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் அவரது இறுதி படமாக பேசப்படுகிறது. இப்படம் முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தாலும், சென்சார் மற்றும் வெளியீட்டு சிக்கல்களால் தொடர்ந்து தாமதிக்கப்பட்டது.
இதுவரை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், படம் இணையத்தில் முழுமையாக கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விஜய் இதுவரை மௌனம் காத்து வருகிறார்.
தயாரிப்பாளர் தரப்பிற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற தகவலும் பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், “ஜனநாயகன்” படத்தின் வெளியீட்டை இறுதி செய்ய தயாரிப்பாளர் தரப்பு, முக்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாத இறுதியில் படத்தை வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விளம்பர பணிகள் மற்றும் ஆடியோ வெளியீடு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விநியோகஸ்தர்கள் தரப்பும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, OTT தளங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், “ஜனநாயகன்” திரைப்படம் ஏப்ரல் 24 அல்லது 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது
Listen News!