• Apr 15 2026

“எங்கேயும் காதல்” பாடகரின் தற்போதைய நிலை இப்படியா? பாலா வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான கேபிஓய் பாலா தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகின்றார். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பின்னர் தனது காமெடி டைமிங்கால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் காந்தி கண்ணாடி படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

ஆரம்பத்தில் தனியாக உதவிகளை செய்து வந்த பாலாவுக்கு பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் கை கொடுத்தார். அவர்கள் இருவரும் இணைந்து பல உதவிகளை மக்களுக்கு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கேபிஓய் பாலா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதில் எங்கேயும் காதல் பட பாடகரின் தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


அதாவது, ஒரு காலத்தில் தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடகர் ரிச்சர்டின் தற்போதைய நிலை பலரையும் கலங்க வைத்துள்ளது. இவர் எங்கேயும் காதல் படத்தில் “நங்கை” பாடல் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். அதன் பின்னர் ரஜினி முருகன் படத்தில் “மீசை பியூட்டி” போன்ற பாடல்களையும் பாடினார்.

தற்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக, முகம் ஒரு பக்கம் இழுத்தது போன்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திறமையான பாடகர் ஒருவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருப்பது ரசிகர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இவர் தான் அந்த பாடல்களை பாடியவர் என்பது பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில், கேபிஓய் பாலா வெளியிட்ட வீடியோவுக்குப் பின்னரே பலருக்கும் இது தெரியவந்துள்ளது.

இவரது நிலையை அறிந்த பாலா, நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று, “என்னால் முடிந்தது ரூ.50,000 தான்” என்று கூறி பண உதவி செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவருக்கு உதவி செய்யக்கூடியவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement