• Apr 15 2026

“ஜெயிலுக்கு போக தயாராக இரு..” வாட்டர் மெலன் ஸ்டாருக்கு பிரபலம் கொடுத்த எச்சரிக்கை

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் “வாட்டர் மெலன் ஸ்டார்” என அறியப்படும் திவாகர், சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆரம்பத்தில் கஜினி படக் காட்சியை ரீல்ஸ் செய்து பிரபலமான அவர், பின்னர் பல நடிகர்களை பின்பற்றி வீடியோக்கள் வெளியிட்டு கவனம் பெற்றார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் அவரது பேச்சுகள் மற்றும் தற்பெருமை காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, தமிழ் சினிமா குறித்து அவர் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்தில், கானா வினோத், மா.கா.பா ஆனந்த் மற்றும் புகழ் ஆகியோர் தன்னை தாக்கியதாக திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.


இதற்கு பதிலளிக்கும் வகையில் மா.கா.பா ஆனந்த் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் எதிர் புகார் அளித்ததுடன், செய்தியாளர்களையும் சந்தித்து விளக்கம் அளித்தனர். அதில், திவாகர் ஒரு போட்டியாளரின் மனைவியிடம் தகாத முறையில் பேசியதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் தற்போது பிரபலம் ஜோ மைக்கல் கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் தனது பதிவில்  “ஜெயிலுக்கு போக தயாராக இரு” என திவாகருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கணவர் முன்னிலையில் மனைவியிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை மேற்கோள் காட்டி, திவாகரின் நடத்தைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

Advertisement