• Apr 15 2026

170 கோடி வசூல் வேட்டைக்கு பிறகு அடுத்த அதிரடி! 'வாழா 3' கன்பார்ம்... தரமான அப்டேட்!

shali / 1 day ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வாழா’ திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதாசிரியரான விபின் தாஸ், ‘வாழா 3’ உருவாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 


முதல் இரண்டு பாகங்களும் ஆண்களின் வாழ்க்கை, அவர்களின் சிக்கல்கள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த நிலையில், மூன்றாம் பாகம் பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு வெளியான இந்த நகைச்சுவை-நாடகத் திரைப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனந்த் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிஜூ சன்னி, அமித் மோகன், ஜோமோன், அன்ஷித், அனுராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுவாரஸ்யமான கதைக்களமும் இயல்பான நடிப்பும் காரணமாக படம் வெற்றி பெற்றது.

குறிப்பாக, சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவான ‘வாழா 2’ உலகளவில் 170 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியால், மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட புதிய கதை எப்படி அமையும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement