• Apr 15 2026

படைப்பாளிக்கு இது பெரிய அடி! விஜய் பட விவகாரத்தில் பொங்கியெழுந்த விக்னேஷ் சிவன்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வந்தது. முதலில் தை மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்ட இப்படம், சென்சார் சிக்கல்கள் காரணமாக தாமதமானது. இந்நிலையில், சமீபத்தில் படம் இணையத்தில் லீக் ஆனது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து ‘Love Insurance Kompany’ (LIK) பட விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் தனது வேதனையை வெளிப்படுத்தினார். “ஒரு படைப்பாளிக்கு இப்படியான லீக் சம்பவம் என்பது இறப்பிற்கு சமமான வலி. ஒரு திரைப்படம் உருவாக எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பதை நாங்கள் அறிவோம். நண்பர் எச். வினோத் தைரியமாக இருக்க வேண்டும்.” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.

திரைப்படங்கள் லீக் ஆகும் பிரச்சனை திரையுலகில் தொடர்ந்து கவலை அளித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதனை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. படக்குழுவின் கடின உழைப்பை பாதிக்கும் இந்த வகையான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement