சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாவைப் பார்க்க பூ வியாபாரிகள் வருகின்றார்கள். ஆனால் விஜயா அவர்களை வாசலில் வைத்தே வெளியே அனுப்ப முயற்சிக்கின்றார். அப்போது அங்கு வந்த அண்ணாமலை, அவர்களை உள்ளே அழைத்து பேசுகின்றார்.
அதன் பின், அவர்கள் தங்களுடைய பூ வியாபாரம் நடத்துவதற்கு சில ரவுடிகள் தடையாக இருப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீனாவிடம் கோரிக்கை விடுக்கின்றார்கள். மீனாவும் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அந்த நேரத்தில் விஜயா, பாத்திரங்களை கழுவு, வீட்டை பெருக்கு, துணியை துவை என அடுக்கடுக்காக மீனாவுக்கு வேலைகளை சொல்கிறார். எனினும் அங்கிருந்த முத்து, “நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன்” என்று கூறி மீனாவுக்காக வேலைகளை செய்து உதவுகிறார்.

இறுதியில் இதை கவனித்த அந்த பெண்கள், “புகுந்த வீடு எப்படி இருந்தாலும், கணவன் நல்லவனாக ஆதரவாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று கூறி அவர்களை பாராட்டி விட்டு செல்கின்றார்கள். அண்ணாமலையும், “நீ ரொம்ப கெட்டிக்காரன், எப்பவும் மீனாவுக்கு ஆதரவாக இரு” என்று முத்துவை பாராட்டுகிறார்.
இன்னொரு பக்கம், ரேகா தன்னுடைய அம்மா யார் என்பதை உண்மையாக சத்யாவிடம் சொல்லுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, “உன்னுடைய அம்மா என் குடும்பத்தையே இல்லாமல் ஆக்க நினைக்கிறாள். அப்படி தெரிந்தும் என்னை ஏன் காதலித்தாய்?” என்று வருத்தப்படுகிறார்.
ஆனால் ரேகா, “நான் உன்னை உண்மையாக விரும்பினேன். நம்பிக்கை இருந்தால் காதல் ஜெயிக்கும்” என்று கூறி, இந்த விஷயத்தை முத்து, மீனாவிடம் சொல்லலாம் என்று முடிவு செய்கிறார்கள்.
அதன் பின் அவர்கள் இருவரும் பைக்கில் செல்லும் போது, அதை சிந்தாமணி பார்த்துவிடுகிறார். மேலும், “சத்யா மீனாவின் தம்பிதானே, ரேகாவுடன் ஏன் செல்கிறார்?” என்று எண்ணி அவர்களை பின்தொடர்கிறார்.
இறுதியில், மனோஜின் வருங்கால மனைவி அவருடைய ஷோரூமுக்கு வந்து, அவருடன் அவுட்டிங் செல்லக் கேட்கிறார். அதற்கு மனோஜ் காரில் போகலாம் என்று சொல்ல, “அமெரிக்காவில் காரில் சென்ற அனுபவம் பிடிக்கவில்லை, அதனால் ஆட்டோவில் போகலாம்” என்று கூறுகிறார்.
Listen News!