• Aug 08 2025

பிரமாண்டமாக வந்த ‘தக் லைஃப்’.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்! ஆனால் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த படம் தான் ‘தக் லைஃப்’. தமிழ் சினிமாவின் புரட்சி நடிகர் கமல் ஹாசன் மற்றும் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப நடிக்கும் சிம்பு ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்பதாலேயே இந்தத் திரைப்படம் மீது அபாரமான எதிர்பார்ப்பு நிலவியது.


இந்தப் பிரம்மாண்ட கூட்டணி மற்றும் மணிரத்னம் இயக்கும் படம் என்பதாலேயே இந்தப் படம் ரசிகர்களிடையே ஒரு ஹைபாக இருந்து வந்தது. ஆனால், படம் நேற்று (ஜூன் 5, 2025) திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அதே அளவுக்கு திருப்தி பெறவில்லை என்பதோடு, விமர்சன ரீதியாகவும் சில எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

'தக் லைஃப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம், கதையும் திரைக்கதையும் அவரே எழுதியுள்ளார். தயாரிப்பு பணிகளை ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகவும் உயர்ந்த தயாரிப்பு மதிப்பில் முன்னெடுத்துள்ளனர்.


இத்திரைப்படம் ஒரு அரசியல் த்ரில்லர் மற்றும் சமூக அவலங்களை பிரதிபலிக்கும் பிரபலமான கதையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கமல் ஒரு புரட்சியாளராக நடித்துள்ளார். ஆனால், இந்த சமூக அரசியல் கதைக்களம் அனைவரும் விரும்பாத வகையில் இருப்பதுதான் விமர்சனங்களில் கூறப்படும் முக்கிய குறையாக உள்ளது.

தக் லைஃப் விமர்சன ரீதியாக எதிர்மறைகளை சந்தித்தாலும், அதன் முதல் நாள் வசூல் தமிழ் சினிமாவிற்குள் ஒரு சாதனையாகும். தமிழ்நாட்டிலேயே ரூ.15.2 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இப்படம் எதிர்வரும் நாட்களில் அதிகளவான வரவேற்பை தொடர முடியும் என்பதில் சந்தேகம் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement